\
அண்ணாமலை
அண்ணாமலைபுதிய தலைமுறை

“என் மீது அழுத்தம் எதுவும் இல்லை” - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

“நாட்டு மக்களுக்கு மிக சிறப்பான பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது” - அண்ணாமலை
Published on

தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ வேலாயுதன் (73) கடந்த மே மாதம் 8 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். 1996 - ல் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். இவரது சொந்த ஊரான நாகர்கோவில் அருகே கருப்புக்கோடு பகுதியில் இவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களையும் சந்தித்தார்.

அண்ணாமலை
அண்ணாமலைpt web

அப்போது பேசிய அவர், “நாட்டு மக்களுக்கு மிக சிறப்பான பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு பட்ஜெட் அடுத்த 5 ஆண்டுக்கான சிறப்பான ஆட்சியை உணர்த்தும் வகையில் உள்ளது” என்றார்.

அண்ணாமலை
மத்திய பட்ஜெட் | “இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு முன்னோக்கி எடுத்துச் செல்லும் பட்ஜெட்” - ஓபிஎஸ் பாராட்டு

முன்னதாக அவர் ‘அரசியலில் இருக்க வேண்டுமா என பல நேரங்களில் யோசிப்பேன்’ என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கையில், “என் மீது அழுத்தம் எதுவும் இல்லை. தனிப்பட்ட முறையில் சமரசம் செய்துகொள்ளாதவரை அரசியலில் இருப்பேன்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com