ஜுன் 14 முதல் ஜூலை 19 வரை பேரவைக் கூட்டத்தொடர்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் பேசிய சபாநாயகர் தனபால், ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவித்தார். காலை 10 மணிக்கு பேரவைக் கூட்டம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 நாட்கள் இந்தக் கூட்டம் நடைபெறும். கூட்டத்தொடரின் போது மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. விவாதத்திற்கு இடையே சில மசோதாக்களும் நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது.