தமிழ்நாடு
தமிழக சட்டப்பேரவை தொடர் ஜூலை 20-ல் முடிகிறது..!
தமிழக சட்டப்பேரவை தொடர் ஜூலை 20-ல் முடிகிறது..!
வேலூர் தேர்தல் காரணமாக தமிழக சட்டப்பேரவை தொடரை வரும் 20-ஆம் தேதியுடன் நிறைவுசெய்ய அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 11-ஆம் தேதி தொடங்குகிறது. 18- ஆம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில் வேலூர் மக்களவைத் தேர்தல் காரணமாக சட்டப்பேரவை தொடரை வரும் 20-ஆம் தேதியுடன் நிறைவு செய்ய அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.