பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் மே மாதம் 25-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக எம்எல்ஏ-க்கள் அடுத்தடுத்து சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வரும் நிலையில் அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் கூட உள்ளது. இந்தக் கூட்டத்தில், அரசியல் நிலவரம், தமிழக பிரச்னைகள் குறித்து முதலமைச்சர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி நாளை பிரதமரை சந்திக்க உள்ள உள்ள நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அதிமுகவின் மற்றொரு அணியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியைச் சந்தித்து வந்தார். இந்நிலையில் நாளை பிரதமரை தமிழ முதலமைச்சர் சந்திக்கும்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த அமைச்சரவைக் கூட்ட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.