TN Among 3 States with Highest PSU Losses 16th Finance Commission Report
தமிழ்நாடு அரசுfile image

நஷ்டத்தில் மாநில பொதுத் துறை நிறுவனங்கள்.. 3ஆவது இடத்தில் தமிழ்நாடு.. நிதிக்குழு தகவல்!

நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் அதிக இழப்பை சந்தித்து வரும் 3 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என 16ஆவது நிதிக்குழு அறிக்கை கூறியுள்ளது.
Published on

நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் அதிக இழப்பை சந்தித்து வரும் 3 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என 16ஆவது நிதிக்குழு அறிக்கை கூறியுள்ளது.

நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் அதிக இழப்பை சந்தித்து வரும் 3 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என 16ஆவது நிதிக்குழு அறிக்கை கூறியுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான நிதிப்பகிர்வு குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ள 16ஆவது நிதிக்குழு மாநிலங்களின் நிதி நிலை குறித்த விவரங்களையும் வெளியிட்டுள்ளது. இதில் 2022-23ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் 32,400 கோடி ரூபாய் இழப்புடன் முதலிடத்தில் இருந்ததாகவும் ராஜஸ்தான் 18 ,814 கோடிரூபாய் இழப்புடன் 2ஆவது இடத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் 16 ,48 கோடி ரூபாய் இழப்புடன் 3ஆம் இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Among 3 States with Highest PSU Losses 16th Finance Commission Report
தமிழ்நாடு அரசுx page

தமிழ்நாட்டை பொறுத்தவரை டேன் ஜெட்கோ அதிகபட்சமாக 9,192 கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருந்தது. எனினும் பின்னர் மாநில அரசின் நடவடிக்கைகளால் இந்த இழப்பு சரிக்கட்டப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவது மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளை பாதிக்கும் என நிதிக்குழு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 100 பொதுத்துறை நிறுவனங்களில் 35 நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இந்நிறுவனங்களை தொடர்ந்து நடத்த 2022-23ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு 26,867கோடி ரூபாயை ஒதுக்கியிருந்ததாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது

TN Among 3 States with Highest PSU Losses 16th Finance Commission Report
தமிழகத்தை நிதிக்குழு தொடர்ந்து தண்டிக்கிறது - முதலமைச்சர் வருத்தம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com