டிகேஎஸ் இளங்கோவன்web
தமிழ்நாடு
'திமுக கூட்டணிக்கு பாமக, தேமுதிக வர வாய்ப்பு..' - டிகேஎஸ் இளங்கோவன்
தமிழக அரசியல் களத்தில் கூட்டணி கணக்குகள் மாற வாய்ப்பு இருப்பதாக டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணிக்கு பாமக, தேமுதிக வர வாய்ப்புள்ளதாக திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழக அரசியல் களத்தில் கூட்டணி கணக்குகள் மாற வாய்ப்பு இருக்கிறது என்றும், இரண்டாக பிரிந்துள்ள பாமகவில் இருந்து ஒரு அணி திமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேமுதிக கடைசி நேரத்தில் திமுகவுடன் சேர வாய்ப்புள்ளதாகவும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பிரேமலதாpt desk
இரு கட்சிகளும் இணையும்பட்சத்தில் இருக்கும் தொகுதிகளை, அனைத்து கட்சிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டியதுதான் எனவும் அவர் கூறியுள்ளார். வரும் தேர்தலில் தமிழகத்தில் இருமுனை போட்டியே நிலவ வாய்ப்புள்ளதாகவும், பாஜக தங்கள் அணிக்கு தவெகவை மிரட்டி கொண்டுவந்துவிடுவார்கள் எனவும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்