\
ஆவடியில் ‘ரூ.153 கோடி’ மதிப்பீட்டில் புது டைடல் பார்க்

ஆவடியில் ‘ரூ.153 கோடி’ மதிப்பீட்டில் புது டைடல் பார்க்

ஆவடியில் ‘ரூ.153 கோடி’ மதிப்பீட்டில் புது டைடல் பார்க்
Published on

ஆவடியில் புதிய டைடல் பார்க் வளாகம் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் ஐ.டி பார்க் வளாகம் டைடல் பார்க். இங்கு சில ஐ.டி மற்றும் கார்ப்ரேட் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோன்று புதிதாக ஒரு ஐ.டி பார்க்கை ஆவடியில் அமைக்க டைடல் பார்க் திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிக்கு டைடல் பார்க் சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.130 கோடி என்றும், ஜி.எஸ்.டி வரித்தொகை ரூ.23.4 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த படிவங்கள் டைடல் பார்க் இணையத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை முடிப்பதற்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஆவடி நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com