தாய் இறந்த சில மாதங்களில் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு... குடும்பத்தினர் அதிர்ச்சி

தாய் இறந்த சில மாதங்களில் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு... குடும்பத்தினர் அதிர்ச்சி

தாய் இறந்த சில மாதங்களில் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு... குடும்பத்தினர் அதிர்ச்சி
Published on

திருவேற்காட்டில் தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவேற்காடு சுந்தரசோழபுரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் வருண் (20). இவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வருண், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, திருவேற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வருண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வருணின் தாய் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வருண் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com