17வத நாளாக போராட்டம் - 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
17வத நாளாக போராட்டம் - 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்புpt desk

திருவாரூர் | சாதி சான்றிதழ் கேட்டு 17வது நாளாக போராட்டம் - 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆதியன் பழங்குடியின சான்றிதழ் வழங்கக் கோரி 17 வது நாளாக பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

செய்தியாளர்: மாதவன்

திருவாரூர் மாவட்டத்தில் ஆப்பரகுடி, விளத்தூர், திருத்துறைபூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் ஆதியன் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த ஆதியன் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களின் பிள்ளைகள் 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு பள்ளிகளில் பயின்று வருகிறார்கள்.

17வத நாளாக போராட்டம் - 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு - தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

இந்நிலையில், இந்த மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு ஆதியன் பழங்குடியின சான்றிதழ் வழங்கக் கோரி தொடர்ந்து 17வது நாளாக பள்ளிக்குச் செல்லாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பத்தாம் வகுப்பு ,11ஆம் வகுப்பு ,12ஆம் வகுப்பு உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வு மற்றும் இறுதித் தேர்வு தொடங்க உள்ள சூழ்நிலையில் மாணவர்கள் 17 வது நாளாக பள்ளிக்குச் செல்லாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com