டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்!

டெல்லி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் இரயில் நிலையத்தில் காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Farmers
Farmerspt desk

திருவாரூர்

செய்தியாளர்: மாதவன் குருநாதன்

டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி உயிர் பலி வாங்கிய பாஜக அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருவாரூர் ரயில் நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Farmers
Farmerspt desk

பாதுகாப்பு பணியில் ரயில்வே போலீசார் மற்றும் தமிழக காவல் துறையினர் என 35 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி

அதேபோல், திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நடைமேடை பகுதிக்கு அழைத்து சென்றனர்.

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில் டெல்லி விவசாயிகள் போராட்டதிற்கு ஆதரவாக ஐக்கிய விவாசகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை இரயில் மறியல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பட்டுக்கோட்டை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து போராட்டக்காரர்களை ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்க மறுத்ததால் ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் நின்று கண்டன ஆர்ப்பாட்டம் எழுப்பினர்.

இந்த இரயில் மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.வீரப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க தலைவர் கமால் பாட்ஷா முன்னிலை வகித்தார்.

பின்னர், டெல்லியில் போராடும் விவசாயிகளை சுட்டுக் கொள்ளாதே, குறைந்த பட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும், வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், வேளாண் கடன் முழுமைக்கும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரயில் மறியல் நடைபெற்றது. இந்த இரயில் மறியலில் பல்வேறு விவசாய சங்கங்களை சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் விவாசயிகள் கலந்துக்கொண்டனர்.

காரைக்கால்

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகளை சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்தும் காரைக்கால் மாவட்ட விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து காரைக்கால் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் பேச்சுவார்த்தை செய்து அப்புறப்படுத்தினர்.

நாகை

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கீழ்வேளூரில் ரயில் மறியல் போராட்டம்

ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்கு பேரணியாக வந்த 50 க்கும் மேற்பட்ட விவிசாயிகளை ரயில் கேட்டை மூடி போலீசார் தடுத்து நிறுத்தினர்.

எர்ணாகுலம் - காரைக்கால் ரயிலை மறிக்க முற்பட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்தியதால் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பினர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் தலைமையில்  எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்லவன் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்களை பத்து நிமிடங்களுக்கு மேல் போராட்டம் நடத்தியதால் எழும்பூர் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com