திருவண்ணாமலை நிலச்சரிவு: 6 பேரின் உடல்கள் மீட்பு.. கண்ணீரில் கரையும் உறவுகள்!
திருவண்ணாமலை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 7 பேர் சிக்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் முதலில் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. பின் மேலும் இருவரது உடல்கள் தென்பட்டதை அடுத்து, அவையும் மீட்கப்பட்டன. மீதமிருக்கும் நபர்களின் உடல்கள் எங்கிருக்கிறது என்பது தேடப்பட்ட நிலையில், அதில் மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மீட்புப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு வந்த அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளிடம் மீட்புப் பணி விபரங்களைக் கேட்டறிந்தார். நிலச்சரிவில் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்கப்படும் உடல்கள் திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அதன்பின்னர் மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மாநில பேரிடர் மீட்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் இதுவரை அதிகனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதே இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.