திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நினைத்தாலே முக்தி தரும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேத விற்பனர்கள் வேத மந்திரம் புழங்க 64 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

இன்று அதிகாலை முதல் சுவாமிகளுக்கு அலங்காரங்கள் அபிஷேகங்கள் சேய விக்கப்பட்டு மகாதீப ஆராதனைகள் நடைபெற்றது.

இன்று முதல் காலையிலும் இரவிலும் சுவாமிகள் வீதி உலா வரும் பத்து நாள் திருவிழா நடைபெறும். அதன் முடிவில், அதாவது 10-வது நாளான டிசம்பர் 6ஆம் தேதி காலை நான்கு மணிக்கு கோவிலின் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

இதைக் காண உலகின் பல பகுதிகளில் இருந்தும் 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள், கோயில் நிர்வாகம் - மாவட்ட நிர்வாகம் - காவல்துறையின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com