Actor Prabhu deva
Actor Prabhu devapt desk

பொன்னேரி | 1800 நடன கலைஞர்கள்..100 பாடல்கள்..100 நிமிடங்கள்; பிரபுதேவா முன்னிலையில் நடந்த உலக சாதனை!

பொன்னேரி அருகே சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு பிரபுதேவா முன்னிலையில் உலக சாதனை நிகழ்ச்சியாக 1800 நடன கலைஞர்கள், பிரபு தேவாவின் பாடல்களுக்கு 100 நிமிடங்கள் நடனமாடி உலக சாதனை. படைத்தனர்.
Published on

செய்தியாளர்: எழில்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு திறந்தவெளி அரங்கத்தில் நம்ம மாஸ்டர் நம்ம முன்னாடி என்ற நடன நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில், சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் சுமார் 1800க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்த நடிகர் பிரபுதேவா, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

Dance masters
Dance masterspt desk

இதையடுத்து பிரபுதேவா நடனத்தில் உருவான 100 பாடல்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து 100 நிமிடங்களுக்கு 100பாடல்கள் ஒவ்வொரு குழுவினராக மேடை அருகே வந்து நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். 1 நிமிடத்துக்கு 1 பாடல் என்ற வகையில் நேரம் குறைக்கப்பட்டு அடுத்தடுத்து பாடல்கள் இசைக்கப்பட்டன. இதையடுத்து நடன கலைஞர்கள் ஆடுவதை மேடையில் நின்றபடியே பிரபுதேவா கண்டு ரசித்தபடி நடனக் கலைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

Actor Prabhu deva
தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது - கார்த்தி சிதம்பரம்

இதைத் தொடர்ந்து 100 நிமிடங்கள் 100 பாடல்களுக்கு நடனமாடி இண்டர்நேஷனல் ப்ரைடு வேர்ல்ட் ரெகார்ட் சாதனை நிகழ்த்தினர். உலக சாதனை நிகழ்த்தியதற்கான சான்றிதழை பிரபுதேவா வழங்கினார்.

சுமார் 2 மணி நேரம் இந்த நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்த பிரபுதேவாவுடன் நடன இயக்குனர் ராபர்ட், நடிகர் ரோபோ சங்கர், நடிகை இந்திரஜா சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com