\
திருவள்ளூர்: மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவருக்கு நேர்ந்த பரிதாபம்

திருவள்ளூர்: மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவருக்கு நேர்ந்த பரிதாபம்

திருவள்ளூர்: மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவருக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர் ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சாத்தான் குப்பத்தைச் சேர்ந்தவர் ராமன் (36).இ வர் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் 4 மீனவர்களுடன் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார்.

அப்போது, பழவேற்காடு முகத்துவாரம் கடல் பகுதியிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர் ராமன் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளார். உடன் சென்ற மீனவர்கள் உடனே கடலில் குதித்து அவரை மீட்டனர். ஆனால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்த திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com