\
திருவள்ளூர்: அலுவலகத்தில் பணியில் இருந்தபோது ஊராட்சி செயலர் எடுத்த விபரீத முடிவு

திருவள்ளூர்: அலுவலகத்தில் பணியில் இருந்தபோது ஊராட்சி செயலர் எடுத்த விபரீத முடிவு

திருவள்ளூர்: அலுவலகத்தில் பணியில் இருந்தபோது ஊராட்சி செயலர் எடுத்த விபரீத முடிவு
Published on

திருவள்ளூரில் பணியின் போது அலுவலகத்தின் உள்ளேயே ஊராட்சி செயலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (52). இவர், மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று மதியம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள அவரது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு நிலையில் இருந்துள்ளார்.

இதனை கண்ட சக ஊழியர்கள் உடனடியாக மணவள நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மணவாள நகர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பணியின்போது ஊராட்சி செயலர் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்பது குறித்து அங்குள்ள பணியாளர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com