\
திருவள்ளூர்: தடுப்பணையில் தவறிவிழுந்த இளைஞர் 3 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு

திருவள்ளூர்: தடுப்பணையில் தவறிவிழுந்த இளைஞர் 3 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு

திருவள்ளூர்: தடுப்பணையில் தவறிவிழுந்த இளைஞர் 3 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு
Published on

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை நண்பர்களுடன் வேடிக்கை பார்க்கச் சென்ற இளைஞர் தடுப்பணையில் தவறி விழுந்து நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் 3 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் குருவாயல் ஊராட்சி ஆரிக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (20). இவர், கடந்த 14-ஆம் தேதி மாலை தனது நண்பர்களுடன் திருக்கண்டலம் தடுப்பணையில் வேடிக்கை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது தடுப்பணையில் தவறி விழுந்த அவரை வெங்கல் காவல் துறையினரும், ஆவடி தீயணைப்புத் துறையினரும் தேடிவந்தனர்.

இந்த நிலையில் இன்று தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு படையினர் கொசஸ்தலை ஆற்றில் ரப்பர் படகு மூலம் தேடிப்பார்த்தனர். அப்போது, திருக்கண்டலம் தடுப்பணையில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் நவீனின் சடலம் மிதப்பதை கண்டுடறிந்து அதனை மீட்டனர். இதையடுத்து சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வெங்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com