திருவள்ளூர் கனமழை -  தயார் நிலையில் 20 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை

திருவள்ளூர் கனமழை -  தயார் நிலையில் 20 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை
திருவள்ளூர் கனமழை -  தயார் நிலையில் 20 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.வானிலை ஆய்வு மையத்தின் கன மழை எச்சரிக்கையை தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து 20 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் திருவள்ளூருக்கு விரைந்துள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு நிலையால் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. பொன்னேரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. மேலும் சோழவரம், அலமாதி, செங்குன்றம், புழல், மாதவரம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

கன மழை எச்சரிக்கையை தொடர்ந்து அரக்கோணம் பகுதியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து 20 பேர் அடங்கிய குழுவினர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com