திருத்தணி: கர்ப்பிணிக்கு ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

திருத்தணி: கர்ப்பிணிக்கு ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
திருத்தணி: கர்ப்பிணிக்கு ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

திருத்தணி அருகே பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்றபோது; ஆம்புலன்ஸ்லேயே பெண் குழந்தை பிறந்தது

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த அருங்குளம் காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (26). இவரது மனைவி ஜெனிபர் (23) நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில், ஜெனிபரை அழைத்துக் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.

அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தை விஜயகுமார் என்பவர் ஓட்டிவந்த நிலையில், தாட்சாயினி செவிலியர் பணியில் இருந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஜெனிபருக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆம்புலன்ஸை சாலையோரத்தில் நிறுத்தி ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். இதில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு தாய் மற்றும் சேய்யை கொண்டு வந்து அனுமதித்துள்ளனர். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் பாலமுருகன் ஜெனிபர் தம்பதியினருக்கு இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com