\
துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடிய இளைஞர்
துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடிய இளைஞர்pt desk

திருப்பூர் | நவீன துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடிய இளைஞர் - போலீசார் விசாரணை

திருப்பூரில் பொது வெளியில் நவீன துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடிய சம்பவம் தொடர்பாக இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Published on

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருப்பூர் எஸ்ஆர். நகர் பின்புறம் உள்ள கைசார் கார்டன் பகுதியில் நவீன துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானது.

இந்நிலையில், திருப்பூர் மத்திய காவல்நிலைய போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடிய இளைஞர்
துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடிய இளைஞர்pt desk

விசாரணையில், அவர் துப்பாக்கி பயிற்சி செய்யும் ஏர்கன் வகை துப்பாக்கியை கோவையிலிருந்து கடந்த ஜூலை மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடிய இளைஞர்
மாஞ்சோலை விவகாரம்|தலைமுறை தலைமுறையாக இருந்தவர்களை அப்புறப்படுத்தலாமா? - நீதிமன்றம் அதிரடி கேள்வி!

இதையடுத்து துப்பாக்கியுடன் சென்று பொது மக்களை அச்சுறுத்தியது மற்றும் பறவையை வேட்டையாடியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com