இருவர் கைதுpt desk
தமிழ்நாடு
திருப்பூர்: கஞ்சா விற்பனை செய்ததாக தொழிலாளி உட்பட இருவர் கைது - 12 கிலோ கஞ்சா பறிமுதல்
திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்ததாக பனியன் தொழிலாளி உட்பட இருவரை கைது செய்த போலீசார், 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர்: சுரேஷ் குமார்
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர், தனது நண்பர்கள் உதவியுடன் கர்நாடக மாநிலம் சென்று கஞ்சா வாங்கி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்து வருவதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
Police stationpt desk
இதையடுத்து வெள்ளியங்காடு பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராஜமாணிக்கம் தனது வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவர் கஞ்சா வாங்கிச் செல்ல வந்ததும் தெரியவந்தது.
கையும் களவுமாக இருவரையும் பிடித்த போலீசார், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.