திருப்பூர்: பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருப்பூர் அனுப்பர்பாளையம் பந்தியில் தனியார் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
Fire accident
Fire accidentpt desk

செய்தியாளர்: சுரேஷ் குமார்

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் திருநாவுக்கரசு என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை பனியன் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீ பற்றியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சடைந்த ஊழியர்கள் பனியன் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.

Fire accident
Fire accidentpt desk

மேலும் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, தீ மளமளவென நிறுவனம் முழுக்க பரவி உள்ளது.

Fire accident
பழைய குற்றால அருவிக்கு போறீங்களா? உங்களுக்குதான் இந்த செய்தி!

தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் ஒருமணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள் எரிந்து சேதமாயின. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com