Deathpt desk
தமிழ்நாடு
திருப்பூர் | நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - இரு சகோதரிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
அவிநாசி அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு சகோதரிகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: சுரேஷ்குமார்
கோவையைச் சேர்ந்தவர்கள் அபர்ணா, ஹேமா. சகோதரிகளான இவர்கள் இருவரும் நண்பர் மோனிஷ் உடன் சொகுசு காரில் பெங்களூருவில் இருந்து கோவை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை பழங்கரை பகுதியில் வந்தபோது, , சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது.
Car accidentpt desk
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அபர்ணா, ஹேமா, மோனிஷ் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி போலீசார், மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.