13 வயது சிறுமி ஓட்டிய காரால் விபத்து - சிசிடிவி காட்சிகள்
திருப்பூரில் 13 வயது சிறுமி கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்திமணியன். இவர் இரவு நேரத்தில் வீட்டுக்கு அருகே உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றின் வாசலில் அமர்ந்து ஒய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக அமர்ந்திருந்த காந்தி மணியன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி என்பது தெரியவந்தது.
அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்ததையடுத்து காந்திமணியன் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.