\
திருப்பூர்: 2 கார்கள் மீது லாரி மோதி விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: 2 கார்கள் மீது லாரி மோதி விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: 2 கார்கள் மீது லாரி மோதி விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
Published on

திருப்பூரில் அடுத்தடுத்த இரண்டு கார்கள் மீது லாரி மோதிய விபத்தில் 7 வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி, கதிரவன் என்பவர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார் . லாரி காமநாயக்கன்பாளையம் காவல் நிலையம் அருகே வரும்போது நிலைதடுமாறி எதிரே வந்த அடுத்தடுத்த இரண்டு கார்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கார்த்திகேயன் அவரது மனைவி சரண்யா மற்றும் அவர்களது 7 வயது மகள் தனிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மற்றொரு காரில் இருந்த 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரியை ஓட்டிவந்த கதிரவன் குடிபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com