பழைய பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் - திருப்பூர் ஆட்சியர்
பயன்படுத்தாத பழைய பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கு வைத்துள்ளார்.
நெகிழி இல்லா திருப்பூரை உருவாக்க மாவட்ட நிர்வாகமும் பல்வேறு சமூக அமைப்புகளும் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாணவ மாணவிகள் கொண்டு வரும் பழைய பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பரிசாக நோட்டு புத்தகங்கள், பேனா மற்றும் பென்சில் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அரசு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் துவங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படாமலிருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்து கொடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பயனுள்ள பொருட்களை வழங்கப்படும். இந்த விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், “ திருப்பூரில் உள்ள 1374 அரசுப் பள்ளிகளிலும் 600 தனியார் பள்ளிகளிலும் இத்திட்டத்தை விரிவுப்படுத்தப்படும். அதிகப்படியான பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரும் மாணவ மாணவிக்கு எலெக்ட்ரிக் சைக்கிள் பரிசு வழங்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.