\
தொழிலதிபரை 30 லட்சம் கேட்டு மிரட்டிய தொழிலாளர்கள்

தொழிலதிபரை 30 லட்சம் கேட்டு மிரட்டிய தொழிலாளர்கள்

தொழிலதிபரை 30 லட்சம் கேட்டு மிரட்டிய தொழிலாளர்கள்
Published on

திருப்பூரில் தொழிலதிபரிடம் ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய பனியன் தொழிலாளர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவர் லூர்து சேவியர். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணத்தை தர மறுத்தால் கொலை செய்து விடுவதாகவும் கூறியுள்ளனர். 

சாதாராணமாக எடுத்துக் கொண்ட லூர்து சேவியர், தொடர்ந்து மிரட்டல் வந்ததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மிரட்டல் வந்த அலைபேசி எண்ணை வைத்துக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், லூர்து சேவியை மிரட்டியது அவரிடம் பணிபுரியும் வசந்த் மற்றும் பார்த்தசாரதி என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் பணம் கேட்டு மிரட்டியதாக ஒப்புக்கொண்டதையடுத்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com