tiruppur district assembly constituency updates
Tiruppur web

திருப்பூர் | ’டாலர் சிட்டி’யின் தேர்தல் வியூகம் மற்றும் கள நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதிகள் குறித்த விரிவான தகவல்களை தினமும் வழங்கி வருகிறது புதிய தலைமுறை. அந்த வகையில் இன்று திருப்பூர் மாவட்டத் தொகுதிகள் பற்றி காண்போம்.
Published on

டாலர் சிட்டி' திருப்பூர் மாவட்டத்தின் 2026 தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இம்மாவட்டம், அரசியல் ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கண்டுள்ளது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட சில தொகுதிகளில், கடந்த முறை திமுக வெற்றிகண்டது ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

திமுக - அதிமுக
திமுக - அதிமுகX

திருப்பூர் வடக்கு தொகுதி: திருப்பூர் வடக்கு தொகுதியில் 3.10 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2011 முதல் நடந்த 3 தேர்தல்களிலும் அதிமுகவே இங்கு வெற்றி பெற்றுள்ளது.

திருப்பூர் தெற்கு தொகுதி: திருப்பூர் தெற்கு, சுமார் 1.93 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இங்கு, கடந்த முறை திமுகவின் க.செல்வராஜ் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் தொழிலாளர் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

அவிநாசி தனி மற்றும் பல்லடம் தொகுதி: தொடர்ந்து, அதிமுகவின் இரும்புக்கோட்டையான அவிநாசி தனி மற்றும் பல்லடம் தொகுதிகளைப் பார்க்கலாம். இவ்விரு தொகுதிகளிலும் கடந்த 5 தேர்தல்களாக அதிமுக தொடர்ந்து 5 முறை வென்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, பல்லடம் தொகுதி 3.22 லட்சம் வாக்காளர்களுடன் மாவட்டத்தின் பெரிய தொகுதியாகத் திகழ்கிறது.

knitwear company, tirupur
knitwear company, tirupur web

காங்கேயம் தொகுதி: காங்கேயம் தொகுதியில் 2.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இங்குத் தற்போது செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

தாராபுரம் தொகுதி” தாராபுரம் தனித் தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த முறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகள் - இறுதியாக, உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம். உடுமலைப்பேட்டையில் கடந்த 5 தேர்தல்களாக அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2011-இல் உருவாக்கப்பட்ட மடத்துக்குளம் தொகுதியில், இதுவரை நடந்த 3 தேர்தல்களில் 2 முறை அதிமுகவும், ஒருமுறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன

Tiruppur
Tiruppur web

திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கவுண்டர், முதலியார் மற்றும் பட்டியல் சமூக மக்களின் வாக்குகளே வெற்றியை நிர்ணயிக்கின்றன. இந்த முறை தொழிலாளர் பிரச்னைகளும், ஜிஎஸ்டி தொடர்பான கோரிக்கைகளும் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com