திருப்பூர்: நிலைதடுமாறி தாறுமாறாக ஓடிய பைக்: அண்ணன்-தம்பி உயிரிழப்பு

திருப்பூர்: நிலைதடுமாறி தாறுமாறாக ஓடிய பைக்: அண்ணன்-தம்பி உயிரிழப்பு

திருப்பூர்: நிலைதடுமாறி தாறுமாறாக ஓடிய பைக்: அண்ணன்-தம்பி உயிரிழப்பு
Published on

திருப்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டர் சைக்கிளில் சென்ற சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் தாராபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன்கள் மணிகண்டன் (21), ஜெய்சூர்யா (19). இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், ஊருக்கு சென்று திரும்பிய தம்பி ஜெய் சூர்யாவை மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது திருப்பூர் தாராபுரம் சாலையில் சென்றபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது. இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்த ஜெய்சூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.

இதுகுறித்த தகவல் அறிந்த நல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com