\
திருப்பூர்: தொடர்ந்து 500 மீட்டர் தூரம் சக்கராசனம் செய்து சாதனை படைத்த 9 வயது சிறுவன்

திருப்பூர்: தொடர்ந்து 500 மீட்டர் தூரம் சக்கராசனம் செய்து சாதனை படைத்த 9 வயது சிறுவன்

திருப்பூர்: தொடர்ந்து 500 மீட்டர் தூரம் சக்கராசனம் செய்து சாதனை படைத்த 9 வயது சிறுவன்
Published on: 

அவிநாசி அருகே உள்ள பழங்கரையில் 9 வயது சிறுவன் 500 மீட்டர் தூரம் சக்கராசனம் செய்து சாதனை படைத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள பழங்கரை பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் (39) ராணி (37) தம்பதியரின ஒரே மகன் சபரீஸ்வரன் (9). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 18 மாதங்களாக யோகாசனம் கற்று வரும் சபரீஸ்வரன், சக்கராசனத்தில் 500 மீட்டர் தூரத்தை 448 பல்டிகள் மூலம் கடந்த சாதனை படைத்துள்ளார். 10.42 நிமிடங்களில் இந்த இலக்கை கடந்த சிறுவனின் இந்த சாதனையை நோபல் உலக சாதனை அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com