தமிழ்நாடு
திருப்பூர்: ட்ரோன் கேமராவை கண்டதும் சிதறி ஓடிய இளைஞர்கள்
திருப்பூர்: ட்ரோன் கேமராவை கண்டதும் சிதறி ஓடிய இளைஞர்கள்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் முழு ஊரடங்கை மீறி தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் காவல்துறையினரின் ட்ரோன் காமிராக்களைக் கண்டதும் சிதறி ஓடினர்.
முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் பெருமாநல்லூரின் முக்கிய சாலைகளில் வாகன தணிக்கையிலும், கிராமப்பகுதிகளில் ட்ரோன் கண்காணிப்பிலும் காவல்துறையினர் ஈடுபட்டனர். பெருமாநல்லூர் நால் ரோடு, விவசாயிகள் நினைவு ஸ்தூபியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக சேர்வதும், ஒன்று கூடி விளையாடுவதாகவும் வந்த தகவலையடுத்து அங்கு ட்ரோன் பறக்கவிடப்பட்டு சோதனையிடப்பட்டது. அப்போது ட்ரோனைக் கண்ட சிறுவர்களும், இளைஞர்களும் தெறித்து ஓடி ஒளிந்து கொண்டனர். ட்ரோன் கண்காணிப்பு தொடரும் எனவும் முழு ஊரடங்கை மீறினால் நடவடிக்கை பாயும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.