மாட்டி‌‌‌றை‌‌ச்சி விற்கக்கூடாது என எச்சரித்த வட்டாட்சியர்; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

மாட்டி‌‌‌றை‌‌ச்சி விற்கக்கூடாது என எச்சரித்த வட்டாட்சியர்; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
மாட்டி‌‌‌றை‌‌ச்சி விற்கக்கூடாது என எச்சரித்த வட்டாட்சியர்; விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மாட்டி‌‌‌றை‌‌ச்சி விற்கக்கூடாது என கடை உரிமையாளர் ஒருவரை வட்டாட்சியர் எச்சரித்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

துளுக்கமுத்தூர் அருகே உள்ள கானாங்குளம் பகுதியில், மாட்டிறைச்சி கடை உரிமையாளர் வேலுச்சாமி வீட்டில் அவிநாசி வட்டாட்சியர் சுப்பிரமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேலுச்சாமியை இனி மாட்டிறைச்சி விற்கக் கூடாது என சுப்பிரமணி எச்சரித்தார். மாட்டிறைச்சி விற்கக் கூடாது என சட்டம் உள்ளதா என கேட்டு வேலுச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இது குறித்து வட்டாட்சியரிடம் கேட்டபோது பழங்கரை முதல் நம்பியூர் வரை செல்லும் சாலையில் மாட்டிறைச்சிக் கடைகள் சுகாதாரமின்றி உள்ளதாகவும், சாலை ஓரத்திலேயே மாடுகள் வதை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்ததாலேயே நேரில் சென்று எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். இதனிடையே வட்டாட்சியரின் நடவடிக்கை குறித்து விமர்சனம் எழுந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com