\
திருப்பத்தூர்: லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 2பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 2பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 2பேர் உயிரிழப்பு
Published on

ஆம்பூர் அருகே லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோகுல் மற்றும் யோகராஜ். சாப்ட்வேர் இன்ஜினியர்களான இவர்கள் இருவரும் தங்களது உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள மாராப்பட்டு அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது.

இதையடுத்து சற்று நேரத்தில் தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மற்றும் பிக்கப் வாகனம் மோதியதில், கோகுல் மற்றும் யோகராஜ் ஆகியோர் காரில் சிக்கிக்கொண்டதில் பலந்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதில் சிகிச்சை பலனின்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கோகுல் உயிரிழந்தார். அதேபோல் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யோகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com