மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்
மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்pt desk

திருப்பத்தூர் | ஏரியில் குளிக்கச் சென்ற 6ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

திருப்பத்தூர் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுது;தியுள்ளது.
Published on

செய்தியாளர்: சுரேஷ்

திருப்பத்தூர் அடுத்த தபேதர் முத்துசாமி தெருவைச் சேர்ந்த பாபு என்பவரது மகன் ஆர்யா (12) இவர், பெங்களூருவில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், விடுமுறை காரணமாக ஆர்யா தனது சொந்த ஊருக்கு வந்த நிலையில், தனது நண்பர்களுடன் பெரியவெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள செல்லா குட்டை ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் ஆர்யா, திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார் இதனை அறிந்த மற்ற சிறுவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்
சென்னை | பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்து - ஐ.டி ஊழியர் உயிரிழப்பு

இதையடுத்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com