திருப்பத்தூர்: கொடுத்த கடனை வசூலிக்க முடியாத விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு

திருப்பத்தூர்: கொடுத்த கடனை வசூலிக்க முடியாத விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு
திருப்பத்தூர்: கொடுத்த கடனை வசூலிக்க முடியாத விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு

கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறையினர் தமிழக ஆந்திர எல்லையை காரணம் கூறி புகாரை வாங்க மறுத்ததால் சடலத்துடன் உறவினர்கள் போராடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா புல்லூர் ஊராட்சி பகுதியில் வசித்து வருபவர் ராம்குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், வாலிபர் ராம்குமார் வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியை சார்ந்த மோகன் மற்றும் சந்தோஷ் ஆகியோருக்கு 7 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கொடுத்த கடனை பல ஆண்டுகளாக திரும்பிக் கேட்டு வருகிறார். ஆனால் அவர்கள் வாங்கிய கடனையும் வட்டியையும் கொடுக்காமல் இருந்துள்ளனர். கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க முடியாத காரணத்தால் ராம்குமார், நேற்று இரவு கடிதம் ஒன்றை எழுதி வைத்து தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து இவரது உறவினர்கள் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது காவல்துறையினர் நீங்கள் வசிக்கும் பகுதி ஆந்திராவில் உள்ளது. அதனால் புகாரை வாங்க முடியாது எனக்கூறியுள்ளனர்.

ராம்குமார் வசிக்கும் பகுதியில் அவர் கட்டியிருக்கும் வீடு தமிழக அரசால் வழங்கப் பட்டிருக்கும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. மேலும் அவர் முறையாக புல்லூர் ஊராட்சியில் அதற்கு வரியும் செலுத்தியுள்ளார். அதற்கான ஆதாரங்களை காட்டிய பின்பும் காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.

இதனால் உறவினர்கள் மற்றும் ராம்குமாரின் மனைவி தனது கணவரின் உயிர் இழப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவர் கொடுத்த கடனை திருப்பி வசூலித்து தரவேண்டுமென சடலத்துடன் போராடி வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com