திருப்பத்தூர்: பன்றி காய்ச்சலால் ஒருவர் மரணம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த மளிகை கடைக்காரரான ரவிக்குமார் என்பவர், பன்றி காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பன்றிக்காய்ச்சல் மரணம், திருப்பத்தூர்
பன்றிக்காய்ச்சல் மரணம், திருப்பத்தூர்புதிய தலைமுறை

பன்றிக்காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த மளிகை கடைக்காரரான ரவிக்குமார் என்பவர். இந்நிலையில் கடந்த ஆக. 31-ல், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ரவிக்குமார்.

இது குறித்து வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமாரிடம் கேட்ட போது, “ரவிக்குமார் வீட்டை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் தூய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்” என கூறினார். ஊழியர்கள் தூய்மைப்படுத்திய பின்னர், சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உயிரிழந்த ரவிக்குமாரின் சடலம் அவரின் வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு அவரின் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், வாணியம்பாடி நியூ டவுன் மயானத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு, வாணியம்பாடி நகராட்சி ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு ரவிக்குமாரின் உடலை நல்லடக்கம் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com