\
அண்ணன் தம்பிக்கு நேர்ந்த பரிதாபம்
அண்ணன் தம்பிக்கு நேர்ந்த பரிதாபம்pt desk

திருப்பத்தூர்: வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அண்ணன் தம்பிக்கு நேர்ந்த பரிதாபம்

திருப்பத்தூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அண்ணன் தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: சுரேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அத்திமரத்துபள்ளம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ரமேஷ் சகோதரர்கள் இருவரும் பிளம்பர் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று திருப்பத்தூருக்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில், வேலையை முடித்துவிட்டு இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.

Two wheeler accident
Two wheeler accidentpt desk

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள கள்ளேரி பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரி மீது ராஜேஷ், ரமேஷ் இருவரும் வந்த இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பிதாபமாக உயிரிழந்தனர்.

அண்ணன் தம்பிக்கு நேர்ந்த பரிதாபம்
ஹரியானா | காரில் பசு கடத்துவதாக வந்த தகவல்.. 12ஆம் வகுப்பு மாணவரை சுட்டுக் கொன்ற கும்பல்!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி போலீசார், இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com