\
விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் pt web

”பெரும்பாலான இனிப்புப் பொருட்களில் விலங்குக் கொழுப்பு பயன்படுத்துவது வழக்கம் தான்” - திருமாவளவன்

பெரும்பாலான இனிப்புப் பொருட்களில் விலங்குக் கொழுப்பு பயன்படுத்துவது வழக்கம் தான் என்றும், திருப்பதி லட்டு விவகாரம் அரசியலாக்கப்படுவதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Published on

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்டபோது, மதுரை கே.புதூரில் முதன்முதலாக திருமாவளவனால் கொடி ஏற்றப்பட்டது. 20 அடியில் இருந்து 62 அடியாக உயர்த்தப்பட்ட கம்பத்திற்கு அனுமதி பெறவில்லை என அண்மையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கம்பத்தை அகற்றியது சர்ச்சையானது. ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததைத் தொடர்ந்து, கொடி கம்பத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

திருப்பதி லட்டு விவகாரம்
திருப்பதி லட்டு விவகாரம்முகநூல்

இந்த நிலையில், புதிய கம்பத்தில் திருமாவளவன் கொடி ஏற்றி வைத்தார். கிரேன் மூலம் கொண்டு வரப்பட்ட ராட்சத மாலையை திருமாவளவனுக்கு தொண்டர்கள் அணிவித்தனர்.

மேடையில் பேசிய அவர்,

மாநில கட்சியாக மாறியபோதும், கொடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை விசிக சந்தித்து வருவதாக கூறினார். கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என வெள்ளி விழா மாநாட்டில் தாம் பேசியதையும் திருமாவளவன் நினைவுகூர்ந்தார்.

விசிக தலைவர் திருமாவளவன்
‘திருப்பதி லட்டு’ தயாரிப்பில் இவ்வளவு சுவாரஸ்ய தகவல்கள் இருக்கா? | 300 ஆண்டு வரலாறும்.. பின்னணியும்!

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது திருப்பதி லட்டு விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பெரும்பாலான இனிப்புப் பொருட்களில் விலங்குக் கொழுப்பு பயன்படுத்துவது வழக்கம் தான். இதில், திருப்பதி லட்டு விவகாரம் அரசியலாக்கப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com