\
திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்
Published on

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு திருப்பதிக்கு சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை வி.ஐ.பி தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்த அவருக்கு, கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் வேத மந்திரங்கள் முழங்க ஆசிர்வாதம் செய்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

இதனையடுத்து கோயிலுக்கு வெளியே வந்த அவர் கோயில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் தரிசனம் செய்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டார். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டிக்கு எடுக்க முயன்ற நிலையில் பேச மறுத்த அவர் அறைக்கு சென்றார். இதையடுத்து இன்று மதியம் சென்னை திரும்ப உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com