நெல் அறுவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்புpt desk
தமிழ்நாடு
திருப்பத்தூர்: நெல் அறுவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு – போலீசார் விசாரணை
திருப்பத்தூர் அருகே நெல் அறுவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: சுரேஸ்
திருப்பத்தூர் அடுத்த தாதவல்லி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி சசி (42), திருப்பத்தூர் அடுத்த பெரிய வெங்காயபள்ளி பகுதியைச் சேர்ந்த உமாபதி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் நெல் அறுவடை செய்வதற்காக சென்றுள்ளார்.
DeathFile Photo
அப்போது நெல் அறுவடை செய்யும் கனரக இயந்திரத்தில் நெல் பயிர்களை செலுத்திக் கொண்டிருந்தபோது, திடீரென எதிர்பாராத விதமாக அந்த இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சசி. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜோலார்பேட்டை போலீசார், சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.