ஆம்பூரில் 13 பேருக்கு கொரோனா - வீட்டிற்கே மளிகைப் பொருட்களை அனுப்ப முடிவு

ஆம்பூரில் 13 பேருக்கு கொரோனா - வீட்டிற்கே மளிகைப் பொருட்களை அனுப்ப முடிவு
ஆம்பூரில் 13 பேருக்கு கொரோனா - வீட்டிற்கே மளிகைப் பொருட்களை அனுப்ப முடிவு

ஆம்பூரில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை பொதுமக்களின் வீட்டிலேயே கொடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ஃபீலா ராஜேஷ் அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஆம்பூர் நகர் பகுதியில் மட்டும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க 100 சதவீதம் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன் அருள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் மக்கள் நடமாட்டத்தை குறைக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள அவர், நகர் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com