Tirupathur assembly constituency updates
திருப்பத்தூர்எக்ஸ் தளம்

திருப்பத்தூர் | திமுகவின் கோட்டையைத் தகர்க்குமா அதிமுக? நிலவரம் என்ன?

திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கிய வணிக மையமான வாணியம்பாடியில், கடந்த 20 ஆண்டுகளாக அதிமுக தனது பிடியை வலுவாக வைத்துள்ளது.
Published on

1952 முதல் நடந்த தேர்தல்களில் 9 முறை திமுக இங்கு வாகை சூடியுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ. நல்லதம்பி தொகுதியைத் தக்கவைத்துள்ளார். இருப்பினும், கடந்த 5 தேர்தல்களில் பாமக 2 முறை இங்கு வெற்றி பெற்றுள்ளதால், வன்னியர் வாக்குகள் மற்றும் கூட்டணி மாற்றங்கள் இத்தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கிய வணிக மையமான வாணியம்பாடியில், கடந்த 20 ஆண்டுகளாக அதிமுக தனது பிடியை வலுவாக வைத்துள்ளது. 1952 முதல் 2021 வரையிலான வரலாற்றில் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகள் தலா 4 முறை வெற்றிபெற்று சமநிலையில் இருந்தாலும், கடந்த 5 தேர்தல்களைப் பார்த்தால் அதிமுக 3 முறை வென்று முன்னிலை வகிக்கிறது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அத்தொகுதியின் பலமாகத் திகழ்கிறார். மாவட்டத் தலைநகரான திருப்பத்தூர் தொகுதி, திமுகவின் பாரம்பரியமான கோட்டையாக உருவெடுத்துள்ளது. 1952 முதல் நடந்த தேர்தல்களில் 9 முறை திமுக இங்கு வாகை சூடியுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ. நல்லதம்பி தொகுதியைத் தக்கவைத்துள்ளார். இருப்பினும், கடந்த 5 தேர்தல்களில் பாமக 2 முறை இங்கு வெற்றி பெற்றுள்ளதால், வன்னியர் வாக்குகள் மற்றும் கூட்டணி மாற்றங்கள் இத்தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன. ரயில்வே நகரமான ஜோலார்பேட்டையில் 2 லட்சத்து 33ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த காலங்களில் அதிமுக இருமுறை வென்றிருந்தாலும், தற்போது திமுகவின் தேவராஜி வசம் இத்தொகுதி உள்ளது.

Tirupathur assembly constituency updates
திமுக - அதிமுக, ஸ்டாலின் - எடப்பாடி கே.பழனிசாமிweb

இங்கு வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாகவே இருந்து வருவதால் வரும் தேர்தலில் கடும் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.தோல் பொருட்கள் ஏற்றுமதிக்குப் புகழ்பெற்ற ஆம்பூரில் 2 லட்சத்து 25லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2011 முதல் நடந்த தேர்தல்களில் திமுக, அதிமுக மற்றும் ம.ம.க ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. தற்போது திமுகவைச் சேர்ந்த வில்வநாதன் எம்.எல்.ஏ-வாக உள்ளார். நான்கு தொகுதிகளிலும் சேர்த்து சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில், ஆளுங்கட்சியான திமுக தனது செல்வாக்கைத் தக்கவைக்கப் போராடுகிறது. அதேவேளையில், வாணியம்பாடி போன்ற தொகுதிகளில் தனது பலத்தை நிரூபித்துள்ள அதிமுக, மற்ற தொகுதிகளையும் கைப்பற்றத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com