\
புகார் கொடுத்த இளைஞர்
புகார் கொடுத்த இளைஞர்புதியதலைமுறை

நெல்லை| ”பூணூல் அறுக்கப்பட்டதாக சொல்வது வெறும் கற்பனை; அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை” - காவல்துறை

நெல்லையில் இளைஞர் ஒருவரின் பூணூல் அறுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், இச்சம்பவம் உண்மையல்ல என்றும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
Published on

நெல்லையில் இளைஞர் ஒருவரின் பூணூல் அறுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், இச்சம்பவம் உண்மையல்ல என்றும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.

திருநெல்வேலி தியாகராயநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் இவர் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக அப்பகுதி வழியாக நடந்து சென்றபொழுது, சிலர் அவரை தரக்குறைவாக பேசியதுடன் அவரின் பூணூலை அறுத்ததாக அவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இது குறித்து மத்திய அமைச்சர் எல். முருகன் அவரது இல்லத்திற்கு சென்று அவருக்கு ஆறுதல்கூறியிருந்தார்.

இதை விசாரித்த போலிசார் இளைஞர் கூறுவது போல் அந்த நேரத்தில் எந்தவொரு நிகழ்வும் நடைபெறவில்லை.... பூணூல் அறுக்கப்பட்டதாக இளைஞர் தெரிவித்த நேரத்தில், சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் இது போன்று ஒரு சம்பவம் நிகழவேயில்லை என்று தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com