\
பள்ளி சுவர் இடிந்து விபத்து: உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

பள்ளி சுவர் இடிந்து விபத்து: உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

பள்ளி சுவர் இடிந்து விபத்து: உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
Published on

நெல்லையில் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து, இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயமடைந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் மு..ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை கழிவறைச் சுவர் இடிந்து விழுந்தது. அதில் சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின்றி  ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இவர்கள் தவிர சஞ்சய், இசக்கி பிரகாஷ், சேக் அபுபக்கர், அப்துல்லா ஆகிய 4 மாணவர்களும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயமடைந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் மு..ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com