நெல்லை: கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதிய கார் - புதிய தலைமுறை கேமராமேன் உயிரிழப்பு

நாங்குநேரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதியதில், புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சங்கர்
புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சங்கர்pt desk

புதிய தலைமுறை செய்தி சேனலில் பணிபுரிந்து வரும் நெல்லை மாவட்ட செய்தியாளர் நாகராஜன், கேமரா மேன்கள் சங்கர், நாராயணனமூர்த்தி மற்றும் நியூஸ்7 கேமராமேன் வள்ளிநாயகம் ஆகியோர் நேற்று (23 ஆம் தேதி) காலையில் சந்திரயான் விண்கலம் குறித்த செய்தி சேகரிப்பதற்காக திருவனந்தபுரத்திற்குச் சென்றனர். பின்பு அவர்கள் பணியை முடித்துவிட்டு இரவு சுமார் 9 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து மார்த்தாண்டம், நாகர்கோவில் வழியாக காரில் நெல்லைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். .

புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சங்கர்
புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சங்கர்pt desk

இந்நிலையில், காரை கேமராமேன் சங்கர் ஓட்டிவந்துள்ளார். அப்போது நாங்குநேரி டோல்கேட் அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் நான்கு வழிச்சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், காரில் இருந்த செய்தியாளர் நாகராஜன் மற்றும் நாராயணமூர்த்தி, வள்ளிநாயகம் ஆகியோரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காரில் சிக்கியிருந்த சங்கரை சடலமாக மீட்ட மீட்புக் குழுவினர், பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த சங்கருக்கு மனைவியும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com