தீக்குளித்த குடும்பத்தினருக்கு கடன் கொடுத்த தம்பதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று குடும்பத்துடன் 4 பேர் தீக்குளித்த சம்பவம் தமிழகம் முழுவதுதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கந்துவட்டிக்கு எதிரான குரல்கள் வலுவாக கேட்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் செங்கோட்டை அருகேயுள்ள அச்சன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கந்து வட்டி வழங்கிய தளவாய் ராஜ் - முத்துலட்சுமி என்ற தம்பதியை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீக்குளித்த குடும்பத்தினர் உள்பட பலருக்கு கந்துவட்டிக்கு அந்தத் தம்பதி பணம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.