முதன்முறையாக பொதுத்தேர்வு எழுதும் வள்ளியூர் நரிகுறவர் மாணவிகள்
நரிகுறவர்கள் சமுதாயத்திலிருந்து முதன் முதலாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பூங்கா நகரில் 90 நரிகுறவர்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 22 நரிகுறவர் குழந்தைகள் வள்ளியூர் அருகே உள்ள கோட்டையடி உண்டு உறைவிட பள்ளியில் படித்து வருகிறார்கள். மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நரிகுறவ சமுதாயத்திலிருந்து முதன் முறையாக இரு மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் பார்வதி மற்றும் மாதவி ஆகிய இரு மாணவிகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ்பிராபாகர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர்களுக்கு அறிவுரைகள் கூறி பரிசு பொருட்களையும் ஆட்சியர் ஷில்பா வழங்கியுள்ளார்.
இது குறித்து மாதவி என்ற கூறியபோது, என்னைப் போன்ற சிலர் மட்டுமே 10 ஆம் வகுப்பு வரை படித்து வருகிறோம். நாங்கள் படித்து முன்னேறி மேலும் பலரையும் படிக்க வைப்போம் என்று கூறினார். இதனை அவர் தெரிவித்த போது அங்கு இருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.