\
ஆய்வுக் கட்டுரைக்காக பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன் 

ஆய்வுக் கட்டுரைக்காக பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன் 

ஆய்வுக் கட்டுரைக்காக பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற திருமாவளவன் 
Published on

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், சிதம்பரம் மக்களவை உறுப்பினர் திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. 

இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மொத்தம் 48 ஆயிரத்து 400 மாணவ மாணவிகள் பட்டம் பெறுகின்றனர். இதில் 650 பேர் முனைவர் பட்டமும், 103 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றனர். 4 பேர் இரட்டை பதக்கம் பெற்றனர். நேரடியாக 753 பேருக்கு விழா மேடையில் ஆளுநர் பட்டம் வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். 

இந்நிலையில், 'மதமாற்றம் ஒரு பார்வை' என்ற தலைப்பில் விசிக தலைவர் திருமாவளவன் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைக்காக, அவருக்கு முனைவர் பட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com