திருச்செங்கோடு: திருமணமான இரண்டே நாளில் கணவன் கண்ணெதிரே இறந்த புதுமணப்பெண்

திருச்செங்கோடு: திருமணமான இரண்டே நாளில் கணவன் கண்ணெதிரே இறந்த புதுமணப்பெண்
திருச்செங்கோடு: திருமணமான இரண்டே நாளில் கணவன் கண்ணெதிரே இறந்த புதுமணப்பெண்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நடந்த விபத்தில் புதுமணப் பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தில் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

திண்டுக்கல்லை சேர்ந்த சுரேஷ் (35) மற்றும் சுப்பிரமணி (50) ஆகிய இருவரும் வேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி ஹீரோ ஹோண்டா HF டீலக்ஸ் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அதேபோல திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டியை சேர்ந்த சிவசக்தி நகர் ராமகிருஷ்ணன் (29) என்பவர் அவரது மனைவி ஜீவிதா (21) உடன் திருச்செங்கோட்டில் இருந்து வேலூர் நோக்கி பொலிரோ காரில் சென்றுள்ளார்.

அப்போது இரண்டு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோரமான விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் கால் துண்டாகி உடல் பாகங்கள் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல் பொலிரோ காரில் வந்த புதுமணப்பெண்ணான ராமகிருஷ்ணன் மனைவி ஜீவிதா (21) என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இறந்து போன ஜீவிதாவுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் கடந்த திங்கள் கிழமை அன்று தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் ஆகி இரண்டு நாளில் கோயிலுக்கு செல்ல காரில் வந்து கொண்டிருந்தபோது நேர்ந்த இந்த விபத்தில் கணவன் கண்ணெதிரிலேயே ஜீவிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி மூன்று பேரின் உடல்களும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திருச்செங்கோடு ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com