திருச்செந்தூர் | குடும்பத் தகராறில் ஒருவர் கொலை - போலீசார் விசாரணை
செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியபட்டினத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் ஜெகதீஷ் (32). இவருக்கும் அவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் ஜவகர் (32) என்பவருக்கும் இடையே குடும்பப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஜெகதீஷ் அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஜவகர் வீட்டிற்குச் சென்று ஜவஹரிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது ஜவஹருக்கும் ஜெகதீசுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த ஜவகர் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெகதீசனை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதனையடுத்து அங்கிருந்த ஜெகதீசன் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஜெகதீசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை வழக்கு குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் ஜவகரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.