\
திண்டிவனம்: அரசு பேருந்து- பைக் நேருக்குநேர் மோதி விபத்து; 2 இளைஞர்கள் உயிரிழப்பு

திண்டிவனம்: அரசு பேருந்து- பைக் நேருக்குநேர் மோதி விபத்து; 2 இளைஞர்கள் உயிரிழப்பு

திண்டிவனம்: அரசு பேருந்து- பைக் நேருக்குநேர் மோதி விபத்து; 2 இளைஞர்கள் உயிரிழப்பு
Published on

திண்டிவனத்தில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருச்சியிலிருந்து அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரி அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது.

இதில் திண்டிவனம் கிடங்கல் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் ஸ்ரீராம் (32), மற்றும் எம்ஜிஆர் தெருவை சேர்ந்த காமராஜ் மகன் கரண் (20), ஆகிய இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த திண்டிவனம் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து, இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com